Saturday, December 4, 2010

விடுகதைகள்

1.
வெட்ட வெட்ட பள்ளத்துல விதைநட்டு
வீராப்பு மலையில கொடியேற்றி
தஞ்சாவூர் மலையில காய்காய்த்துத்
தானா பழுத்தபழம் என்ன பழம்?


2.
மை மேல ஏறி
லை பறிக்க போற பெண்ணே
லை வருது கடிக்க
பை மேல ஏறிக்கோ


3.
டாங்கு டீங்கு மரம்
டண்டாங்கி வேல மரம்
வருத்தா கசக்கும்
வாயில போட்டா இனிக்கும்


4.
கொல்லையோ வெள்ளை கொல்லை
விதையோ கருப்பு விதை
கண்ணால பொறுக்கி
கையால விதைத்து
வாயால அளக்கணும்


5.
அடி காட்டில்
நடு மாட்டில்
முனை வீட்டில்


விடைகள்:

1. மழை.
2. எருமை மேல ஏறி
    இலை பறிக்க போற பெண்ணே!
   முதலை வருது கடிக்க
   இலுப்பை மேல ஏறிக்கோ.

3.இலுப்பைப்பூ.
4. எழுதுதல், படித்தல் - தாள், மை.
5. நெற்கதிர்.

No comments:

Post a Comment